Thirupani
திருப்பணி செய்வோம் வாருங்கள்
நம்மை எல்லாம் காத்து இரட்ஷித்து வழி நடத்தும் நம் கருணாமூர்த்தி ஸ்ரீஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா ஆக்னை
இனி யாரும் புது ஆலயங்கள் கட்டாதிர்கள் எங்கெல்லாம் சிதிலமடைந்த வழிபாடு இல்லாத ஆலயங்கள் இருக்கிறதோ அவற்றை புணருத்தாரனம்/ வழிபாடு செய்யுங்கள் என்றார்.
ஸ்ரீமஹாபெரியவா உத்தரவே நம் நித்திய கைங்கர்யமாக ஏற்று அவரது அனுக்கிரத்துடன் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக தமிழகத்தில் சிதிலமடைந்த வழிபாடு இல்லாத ஆலயங்களை எடுத்து நித்திய பூஜையும் தொடர் வழிபாடுகளையும் பெரியவா கைங்கர்யமாக செய்து கொண்டு இருக்கிறோம்.
நம் நித்தியமும் கைங்கர்யத்தில் எடுக்கும் ஆலயங்கள் நமக்கு ஒர் கைக்குழந்தை போல தான், ஆம் சிதிலமடைந்த அந்த ஆலயத்தை மீட்டு முதற்கட்டமாக உழவாரபணி செய்து நித்திய பூஜைக்கு தேவையான நீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து நித்திய பூஜை துவங்கியவுடன் நம் கைங்கர்யம் முடிவதில்லை
Lastest Works
Kuthur Alayam
Thiruvanaikovil
Makimalai Temple
Naducavery Temple
திருப்பணியே பெரும் பணி
நித்திய பூஜை தொடங்கிய ஆலயத்திற்கு அந்த ஆலயம் அறநிலைய துறையா அல்லது சமஸ்தானமா ஊர் பொது கோவிலா என்பதை அறிந்து யார் கட்டுபாட்டில் உள்ளதோ அவர்களிடம் முறையான அனுமதி பெற்று செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் அவ்வாலயத்தில் உற்சவ வழிபாட்டினை முறையாக தொடர்ந்து செய்வதே நம் நித்தியமும் கைங்கர்யத்தின் பிரதான நோக்கம் அதுவே...
ஒரு குழந்தை தவழ்ந்து பின் வளர்வதை போன்றே....
திருப்பணி கைங்கர்யத்தில் பங்கெடுக்க விரும்பும் பக்தர்கள் நமது திருப்பணிக்கான இந்த தனிபட்ட வாட்சாப் குழுவில் இணைந்து கொள்ளவும்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நம் நித்தியமும் கைங்கர்யத்தில் உள்ள பல ஆலயங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பாக வழிபாடுகள் தொடர்கிறது.. இன்னும் பல ஆலயங்கள் அரசு அனுமதி பெற்றவுடன் ஆலயங்களில் திருப்பணி துவங்க இருக்கிறோம்.
உலகில் அனைத்தும் பணி என அழைத்தாலும் பணிகளுக்கெல்லாம் உயர்வான பணி யாதெனில் அது ஆலயத்திற்கு செய்திடும் பணியே ஆகவே அப்பணியை மிக உயர்வாக மதிப்பாக"திரு" என அடைமொழி இட்டு "திருப்பணி" என உயர்வாக அழைக்கப்படுகிறது என்பதை நம் ஸ்ரீமஹாபெரியவா "தெய்வத்தின்குரலில்" மிக அழகாக சொல்லி உள்ளார்.
நாம் வாழும் காலத்தில் இந்த பூமியில் நாம் என்ன தான் கோடி கோடியாக சொத்துக்கள் சேர்த்தாலும் அவை நம் மகனோ,பேரனோ என ஒரிரு வாரிசுகள் வரையே ஆனால் என்றுமே அழியாத நிலையான ஒரே சொத்து என்றால் நம் சேர்க்கும் புண்ணியம் மட்டுமே. ஆலய திருப்பணி என்பது முன்னேழு பிறவிக்கும் பின்னேழு பிறவிக்கும் முக்தியை வழங்க கூடிய மிகப்பெரும் புண்ணிய கைங்கர்யம்.. ஆலய திருப்பணி கைங்கர்யம் செய்வது என்பது பணம் படைத்த அனைவராலும் செய்ய இயலாது.அந்த ஈசனின் அனுக்கிரமும் ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரமும் இருந்தால் மட்டுமே திருப்பணிக்கு ஒரு செங்கல் கூட உங்களால் வழங்க இயலும். இறைவன் ஈசன் அனுக்கிரமும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் பெற்ற தங்களை இப் புண்ணிய ஆலய திருப்பணி கைங்கர்யம் செய்திட வரவேற்கிறோம். ஆலய திருப்பணி கைங்கர்யத்திற்கு தாங்கள் ""ஒரு ரூபாய் தந்தாலும் ஒரு கோடி தந்தாலும்"" கைங்கர்யம் கைங்கர்யமே...இருப்பினும் ஆலய திருப்பணி கைங்கர்யத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ள ஸ்ரீமஹாபெரியவா பக்தர்கள் தனியாகவோ, குடும்பத்தார் சேர்ந்து செய்திடலாம். திருப்பணிகளை அந்த திருப்பணி தங்கள் பெயராலும் குடும்பத்தினர் பெயரிலேயே சங்கல்ப்பமாக ஏற்று செய்யப்படும்.. தங்களுக்கு திருப்பணி நடைபெறும் ஆலயங்கள் மற்றும் அவ்வாலயத்தில் செய்திட வேண்டிய பணிகள் அதற்கான மதிப்பு அனைத்து விபரங்கள் வழங்கப்படும்.. தாங்கள் வழங்கும் கைங்கர்ய தொகைக்கு 80G வரிச்சலுகையும் வழங்கப்படும்.