குருபுரம்
குருபுரம் – ஒரு வழிகாட்டும் ஒளி
ஸ்ரீமஹாபெரியவா தெய்வத்தின் குரல் Vol-1 Page-292.
நம் குழந்தைகளுக்கு முதலில் கொடுக்க வேண்டியது ஆன்மிக கல்வி தான். குழந்தைகளின் மனதில் இளம் வயதிலேயே ஆன்மிகத்தையும் ஒரு கல்வியாக முதல் கல்வியாக படிக்கவைத்து பதிய வைத்து விட்டோம் என்றால் பின்னர் அந்த குழந்தைகள் மனதில் என்றும் நமது தர்மமும்,பண்பாடு நிறைந்து இருக்கும்.
அவர்களது பின் சந்ததிகளும் நம் கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்வார்கள். ஆகவே நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முதல் கல்வி ஆன்மிக கல்வி தான் என்றார்கள் ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா""*
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் ஸ்ரீஜெயேந்திரபெரியவா அனுக்கிரகம் நம் ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பாலபெரியவா ஆக்னையை ஏற்று நம் நித்தியமும் கைங்கர்யத்தின் சார்பாக திருச்சியில் குருபுரம் அமைக்க இருக்கிறோம்..
- குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே இந்து தர்மத்தை அறிமுகப்படுத்துதல்.
- ஆன்மிக கல்வியை ஆரம்ப வயதிலிருந்தே வழங்குதல்.
- குருபுரம்” என்ற மையத்தை அமைத்து ஆன்மிக மற்றும் கல்வி பயிற்சிகளை வழங்குதல்.
- பாரம்பரிய மதிப்புகளுடன் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குதல்.