திருமணம் ஏற்பாடு செய்துள்ள கிராமப்புற ஆலய அர்ச்சகர்கள், வைத்திகர்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு,
மாங்கல்ய தானம் செய்வதன் மூலம் தெய்வீக சேவையாக இக்கைங்கர்யம் செய்யப்படுகிறது.
நமது நித்தியமும் கைங்கரியத்தின் திருத்தமான பக்தியுடன் கூடிய மாங்கல்ய தான கைங்கர்யம்,
பல குடும்பங்களின் திருமண வாழ்விற்கு தெய்வீக ஆசீர்வாதமாக அமைந்துள்ளது.
ஸ்ரீ மகாபெரியவாவின் பொன்மொழி
"தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்வையே நிலைநிறுத்தும் மாங்கல்ய தானம் என்பது, அந்த அன்னதானத்தையும் விட உயரிய கோடானுகோடி புண்ணியங்களைத் தரவல்லது."
ஸ்ரீ மாங்கல்ய ஆசீர்வாத கைங்கர்யம்
சுமங்கலித் தன்மையைப் பாதுகாத்தல் (தீர்க்க சுமங்கலி பாக்கியம்)
இந்து தர்மத்தில் ஒரு பெண்ணுக்கு "சுமங்கலி பாக்கியம்" என்பது மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கள், மகாபெரியவாவின் அறிவுரைப்படி மாங்கல்ய தானம் செய்கிறார்கள்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல்
சமூகக் கண்ணோட்டத்தில், வறுமையின் காரணமாகத் திருமணம் தள்ளிப்போகும் ஏழைப் பெண்களுக்கு உதவும் நோக்கில் இது செய்யப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு மாங்கல்யம் செய்து கொடுத்து அவளது திருமணத்தை நடத்தி வைப்பது, பல தலைமுறைகளைக் காக்கும் மகா புண்ணியத்தைத் தரும்.
மாங்கல்யம்
தீர்க்க சுமங்கலி பாக்கியம்
இந்து தர்மத்தில் ஒரு பெண்ணுக்கு "சுமங்கலி பாக்கியம்" என்பது மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கள், மகாபெரியவாவின் அறிவுரைப்படி மாங்கல்ய தானம் செய்கிறார்கள்.
ஆசீர்வாதம்
தாம்பத்திய நல ஆசீர்வாத கைங்கர்யம்
நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்கு பல மடங்காகத் திரும்பக் கிடைக்கும்" என்பது ஆன்மீக விதி. பிறிதொரு பெண்ணின் மாங்கல்ய பலத்திற்கு நாம் உதவினால், நம்முடைய மாங்கல்ய பலம் நூறு மடங்கு பெருகும் என்பது பெரியவாவின் உன்னத உபதேசம்.
ஸ்திரம்
மாங்கல்ய ஸ்திரத்திற்கான பிரார்த்தனை கைங்கர்யம்
மகாபெரியவா எப்போதும் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவதையே மகா புண்ணியமாகக் கருதினார். வசதி வாய்ப்பற்ற ஏழைக் குடும்பத்துத் பெண்களின் திருமணத்திற்குத் தாலி செய்யப் பொன் (தங்கம்) வாங்கிக் கொடுப்பது அல்லது தாலியையே தானமாக வழங்குவது, ஒரு குடும்பத்தையே வாழ வைக்கும் "மகா தானம்" என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சுபம்
திருமண சுபநிகழ்வு கைங்கர்யம்
குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் திருமணம் தள்ளிப்போவது, வம்ச விருத்தி இல்லாமல் இருப்பது (புத்திர தோஷம்) போன்ற தடைகள் இருந்தால், மகாபெரியவா இந்தத் தானத்தைப் பரிந்துரைத்துள்ளார்.
ஒற்றுமை
குடும்ப ஒற்றுமை & தாம்பத்திய நலம் கைங்கர்யம்
மகாபெரியவாவின் வாக்கு:* ஒரு சுமங்கலிப் பெண், பிறிதொரு பெண்ணின் மாங்கல்யம் சிறக்கச் செய்யும் தர்மம், எமதர்மராஜனின் பாசக்கயிற்றையே மாற்றியமைத்து, அவளது கணவனுக்கு தீர்க்க ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரும்.