கிராமப்புறங்களில் உள்ள பல பழமையான ஆலயங்கள் பராமரிப்பின்றி, பொருளாதார சிரமங்களால் நித்ய பூஜை, திருப்பணி, கும்பாபிஷேகம் போன்ற முக்கிய சேவைகளைச் செய்ய இயலாமல் உள்ளன.
இந்த ஆலயங்களின் ஆன்மீக மரபும், வேத வழிபாடும் தொடர ஆலய கைங்கர்ய உதவி வழங்கப்படுகிறது.
நித்ய பூஜை கைங்கர்யம்
தினசரி பூஜைகள், தீப ஆராதனை, மலர்கள், பூஜைப் பொருட்கள் போன்றவற்றிற்கான கைங்கர்யம்.
நம் புராதணமான ஆலயங்களில் நித்தமும் நித்திய பூஜையும் தீபம் ஏற்றிட…
சிதிலமடைந்த ஆலயங்கள் மீண்டும் உயிர் ஊட்ட…
பக்தியும் பொருளாதாரமும் ஒன்றாக நிலைக்க…
அடுத்த தலைமுறைக்கும் தர்மம் தழைக்க… 🙏
Connect
நித்ய பூஜை நடைபெறாத ஆலயங்களுக்கு உதவி
தினமும் தீபம் ஏற்றாத ஆலயத்தில் ஜீவன் இல்லை…
அங்கே நித்திய பூஜை மீண்டும் மலர நாங்கள் நிற்கிறோம்…
அர்ச்சகர் நியமித்து, தீபம் அணையாமல் காப்போம்…
ஒரு ஆலயத்தை காப்பது – ஒரு ஊரின் ஆன்மாவை காப்பது.
Guided
ஆலய அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆதரவு
இன்றைய காலத்தில் பலர் வருமானத்திற்காக வேறு வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் ஒரு கிராமத்தில் காலங்காலமாக பூஜை செய்து வரும் ஸ்வாமியை விட்டு விடக் கூடாது.
அர்ச்சகர்கள் நிம்மதியாக இருந்தால்தான் நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
Peace
சிதிலமடைந்த ஆலயங்கள் – திருப்பணி
சிதிலமடைந்த ஆலயங்களில் தெய்வ அருள் என்றும் நிறைந்தே இருக்கும்…
அதனை திருப்பணி; பாதுகாப்பது நம் நித்தியமும் கைங்கர்யத்தின் தர்மம்…
காலம் காய்த்த ஆலயத்திற்கு மீண்டும் உயிர் ஊட்ட…
பழமையை காப்பது – பக்தியை காப்பதற்கே.
Unity
தீபம், நெய், பூஜை பொருட்கள் வழங்கல்
பூஜைகளுக்கு தேவையான தீபம், நெய், மலர்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உங்கள் கைங்கர்யம் உதவுகிறது.
Devotional
கிராமப்புற மக்களின் ஆன்மீக வாழ்க்கை பாதுகாப்பு
கிராம மற்றும் சிற்றாலயங்களில் வழிபாடு தொடர, பக்தர்களின் ஆன்மிக வாழ்வை ஆதரிக்கும் சேவையாக கைங்கர்யம் அமைகிறது.