About Trust
Our Story
Walk the Path of Grace and Kainkaryam under Sri Mahaperiyava’s Blessings
ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி,ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குடும்பமாக ஒருங்கிணைத்து பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி வருவதே நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்""
Peace and Enlightenment
ஆதிசங்கர பரம்பரையில் ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68வது ஆச்சார்யராக திகழ்ந்தவர் ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பக்தர்கள் மிக பக்தியுடனும் வாஞ்சையுடனும் அவரை ஸ்ரீமஹாபெரியவா என்றே அழைப்பார்கள்.. ராமா, ராமா என்ற ஒற்றை மந்திரம் மட்டுமே அறிந்திருந்த 13 வது வயது சிறு பாலகனாக மிகப் பெரிய ஸ்ரீகாஞ்சி காமகோடி ஆச்சார்ய பீடத்தின் பீடத்தை ஏற்ற சுவாமிநாதன் ஸ்ரீமஹாபெரியவாக 100 வயது வரை "சர்வ பூதேஷ் ச ஆத்மானம்" என்ற உபநிஷத்தின் படி தனக்கென வாழாது இந்த லோகத்தில் உள்ள சம்ஸ்த ஜீவராசிகளுக்காகவே வாழ்ந்து வழிகாட்டி சென்ற அற்புத மஹான்..
ஸ்ரீமஹாபெரியவா
Power of Presence
ஸ்ரீ மஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்ட்..
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஒரு பிரம்ம ஞானியாக இருந்து வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம், கலை, கலாச்சாரம், சமுதாய ஒழுக்கம் மற்றும் தர்ம நெறிகளை தெளிவாக போதித்தார். ஆலய வழிபாடு, வேத ரக்ஷணம், கோ ரக்ஷணம் மற்றும் ஒவ்வொரு ஜீவனிலும் இறைவனை காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
Soulful Journeys
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரக ஆசிர்வாதத்துடன்
உலகில் உள்ள ஸ்ரீமஹாபெரியவா பக்தர்களால் உருவாக்கப்பட்டது தான் நமது ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்ட்.. மஹாபெரியவா நம்மிடம் என்றும் எப்போதும் மிக வலியுறுத்திய கைங்கர்யங்களை சிரமேற்கொண்டு செய்வதே நாம் பெரியவாவிற்கு செய்திடும் தொண்டாக, பாக்கியாக செய்து வருகிறோம். இக்கைங்கர்யத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பாக்கியம் சேர்த்தே..
ஜெய ஜெய சங்கர !
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நடைபெறும் இக்கைங்கர்யங்கள் அனைத்தும் தங்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பால் மட்டுமே சாத்தியம்..
ஹர ஹர சங்கர !
இன்று "நித்தியமும் கைங்கர்யம்" மஹாபெரியவர் கைங்கர்யம் அறக்கட்டளையாக தமிழகத்தில் நடைபெறும் அனைத்து கைங்கர்யங்களும் நடத்தி கொண்டு இருப்பது பரமேஸ்வர ஸ்வருபமான ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா.
Harmonious Hearts
மகா பெரியவா பாதையும் பார்வையும்
Kanchi Maha Periyava Chandrasekharendra Saraswati இந்திய ஆன்மீக வரலாற்றில், மௌனமே மொழியாகவும், கருணையே செயலாகவும் வாழ்ந்து காட்டிய மகானார்.