Skip to content
Edit Template

Alaya Kainkaryam

ஆலய கைங்கர்யம்

புதிய ஆலயங்களை கட்ட வேண்டாம்; ஏற்கனவே உள்ள ஆலயங்களை காப்பாற்றுங்கள்” — ஸ்ரீமஹாபெரியவா வாக்கு. பாரத தேசம் முழுவதும் அரசர்களும் முன்னோர்களும் எண்ணற்ற ஆலயங்களை கட்டியுள்ளனர். அவற்றை பாதுகாத்து நித்திய பூஜை நடைபெறச் செய்வதே நமது “நித்தியமும் கைங்கர்யம்” டிரஸ்டின் முதன்மை நோக்கம்.

நித்தியமும் கைங்கர்யம் - ஆலய கைங்கர்யம்

இன்று சிதிலமடைந்த கிடக்கும் பல ஆலயங்களுக்கு முதற்காரணம் அந்த மக்களிடம் பக்தி இல்லாமல் போனதும். அந்த ஆலயத்தை நிர்வகிக்க போதுமான நிதி ஆதாரம் இல்லாமல் போனதுமே, இதற்க்காகவே அந்த மக்களிடம் பக்தியை விதைக்க வேண்டும் என்பதே நம் ஆலய கைங்கர்யத்தின் நோக்கம்…அதற்க்காக முதலில் அங்கு உள்ள இறைவனுக்கு நித்திய பூஜைகளை துவங்குவதும் ஆலயத்திற்கு என நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும். பின்னர் வழிபாட்டு உற்சவங்கள் தொடர்ந்து செய்வதே ஆலய கைங்கரியத்தின் பிரதான நோக்கம் .

IMG_1096

ஸ்ரீமஹாபெரியவா வாக்கே நமக்கு ஆக்னை

ஸ்ரீமஹாபெரியாவின் அனுஷ தினதன்று அவ்வாலயத்தில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்றிலிருந்து அவ்வாலயம் நித்திய பூஜைக்கு ஏற்பாடு செய்கிறோம்.. மேலும்ஆலயத்திற்கு தேவையான ஆலயமணி, பூஜைமணிகள், சரவிளக்கு, தீபம் என தேவையான பொருட்கள் மற்றும் நித்திய பூஜைக்கு தேவையான பொருட்கள்...அபிஷேக பொருட்கள் பாத்திரம் என அனைத்தும் வழங்குகிறோம். ஆலயத்திற்கு நித்திய பூஜைக்கு அர்ச்சகர் நியமிக்கிறோம்...அவருக்கு நம் கைங்கர்யம் சார்பாக சம்பளம் மாதம் 3000 ஒரு தொகை வழங்குகிறோம்.அந்த ஆலயத்தை நிர்வகிக்க அந்த கிராம மக்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கிறோம்...அதன் மூலம் ஒரு கூட்டு வங்கி கணக்கு துவங்கி அதில் ஆலய அர்ச்சகருக்கான சம்பளம் வழங்கி வருகிறோம்..மேலும் அவ்வாலயத்தில் ஒரு புராதண / ஆலயங்களில் ஒரு வருடத்தில் நடைபெறும் அனைத்து உற்சவங்கள் பிரதோசம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், ஜப்பசி -அன்னாபிஷேகம் , சிவராத்திரி என அனைத்து உற்சவங்களையும் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஊர் மக்களை கொண்டு செய்து வருகிறோம்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நீங்களும் இந்த ஆலய கைங்கர்யங்களில் பங்கெடுக்க நித்தியமும் கைங்கர்ய உறுப்பினராக இணைந்து கொள்வீர்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர..