Anatha Pretha Samsharam
அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம்
பரோபகாரத்தைப் பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தபோது, ‘நம் எல்லோராலும் அஸ்வமேத யாகம் பண்ணமுடியுமா?’ என்று ஒரு கேள்வி கேட்டேன். அப்புறம் ‘எதற்காக அஸ்வமேதம்?’ என்று கேட்டேன். ” ஹயமேத ஸமர்ச்சிதா” – ”அஸ்வமேதத்தால் விசேஷமாக வழிபடப்படுபவள்” என்று அம்பாளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆனதால் அம்பிகையின் பூர்ண அநுக்ரஹத்தைப் பெறுவதற்காகவே அஸ்வமேதம் செய்யவேண்டும் என்று பதில் சொன்னேன். ஆனால் இந்தக் கலிகாலத்தில், ரொம்பவும் நியமங்கள் தேவைப்படும் அஸ்வமேதம் செய்வது அஸாத்யமாயிற்றே, இதற்கு என்ன பண்ணுவது என்று கேட்டேன்.
அநாத ப்ரேத ஸம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத்
என்பது சாஸ்த்ர வசனம். பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம்
இதர மதஸ்தர்கள் ஜெயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்தெருவிலும் ஸம்பவிக்கும் அநாதை மரணங்களில் ஒன்றுகூட விட்டுப்போகாமல், தங்கள் தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் செய்கிறார்கள்; இப்படிப்பட்ட ஹிந்து ப்ரேதங்கள் மாத்திரம் பெரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாலேயே ஒருவிதமான சடங்கும் இல்லாமல் புதைக்கப்படுகின்றன’ என்கிற பாபமும், அவமானமும் நம்மைச் சேராமலிருக்க இப்போதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக வேண்டும்.
அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் - ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரக ஆசிர்வாதத்துடன் நமது நித்தியமும் கைங்கர்யத்தின் சார்பாக திருச்சியில் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறை மூலம் வரும் (Unclaimed Bodys) அனாத பிரேதங்களை ஸ்ம்காரம் செய்து வருகிறோம்... மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களில் ஸம்பவிக்கும் மரணங்களில் அவர்களது கடைசி சடங்குகள் செய்திட உதவிகள் வழங்கி வருகிறோம்.
தெய்வத்தின் குரல் Tweet


