Skip to content
Edit Template

Annadhana Kainkaryam

அன்னதான கைங்கர்யம்

“உயிரோடு உடம்பைச் சேர்த்து ரக்ஷிப்பது அன்னதானமே.” எல்லா தானங்களிலும் விசேஷமானது அன்னதானமே என சாஸ்திரங்கள் கூறுகின்றன. “யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்” என்று திருமந்திரம் வலியுறுத்துகிறது. ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது ஜாதி, மதம் பார்க்காமல் உதவ வேண்டும். அன்னதானத்தில் மட்டுமே ஒருவரை பூர்ண திருப்தியடையச் செய்ய முடியும்; “உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்பது இதன் உண்மை. ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரக ஆசீர்வாதத்துடன், நமது “நித்தியமும் கைங்கர்யம்” சார்பாக ஆலயங்களில் மற்றும் கும்பாபிஷேகங்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது; கொரோனா காலத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது

கைங்கர்யப் பாதை

அன்னதான கைங்கர்யம்

உயிரோடு உடம்பைச் சேர்த்து ரக்ஷிப்பது அன்னதானமே’’ எல்லா தானங்களிலும் விசேஷம் அன்னதானமே… எண் நான்கு அறம் என்றால் முப்பத்திரண்டு தர்மங்கள். தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்கு மட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்றுவிட்டது

அன்னதானமே முப்பத்திரண்டு தானங்களை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. அதில் முதலில் ஜனங்களுக்கு ”உணவீதல்”, அப்புறம் பசுக்களுக்கு இரை கொடுப்பது, இப்படியே சொல்லிக்கொண்டு போய் தர்ம சத்திரம் கட்டுவது, நந்தவனம் வைப்பது, வைத்யசாலை வைப்பது, குளம் வெட்டுவது என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ரொம்பக் குறைச்சலான திரவியச் செலவில் செய்கிற தண்ணீர்ப் பந்தல் கைங்கர்யத்தோடு முடித்திருக்கிறது.

யார்க்கும் இடுமின் – அன்னதான தர்மம்

ஒருவரின் ஜாதி, மதம், நிலை எதையும் ஆராயாமல் கஷ்டத்தில் இருப்பவருக்கு அன்னம் வழங்க வேண்டும் என்பதே அன்னதானத்தின் உயர்ந்த தர்மமாகும். “யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்” என்ற திருமந்திர வாக்கியமே இதன் அடித்தளம்.

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம்

பணம், பொருள், வசதி எவ்வளவு கொடுத்தாலும் முழு திருப்தி அடைய முடியாது. அன்னம் வழங்கும் போதுதான் “போதும் – திருப்தி” என்று ஒருவன் முழு மனதுடன் சொல்லுகிறான். அதுவே தானத்தின் முழு பலனை தருகிறது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்

உயிரோடு உடம்பை சேர்த்து பாதுகாப்பது அன்னமே. அதனால்தான் “உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்று நம் சான்றோர் சொல்லியுள்ளனர். அன்னதானம் என்பது உணவல்ல – அது உயிர் காக்கும் சேவை.

நித்தமும் அன்னதானம் – தொடரும் கைங்கர்யம்

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகத்துடன், நித்தியமும் கைங்கர்யம் சார்பில் ஆலயங்களிலும் கும்பாபிஷேகங்களிலும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.