Gowsic Raja

Kilikkudu Temple
கிளிக்கூடு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியஸ்வாமி ஆலயம் பார் போற்றும் பாரத தென் சோழ தேசத்தில் வான் மகிழ, வளம் செழிக்க, குடகிக் பிறந்து , தவழந்து பொங்கி புரண்டு வரும் புண்ணிய நதியாய் கரைபுரளும் எங்கள் காவிரி அன்னையை கட்டி மார்போடு சேர்த்து அணைத்து மகிழுந்து கொண்டாடும் உலகில் முதல் அணையாம், நவீன அறிவியலும், விஞ்ஞானமும் வியத்தகு அணையாம், எங்கள் பரமேஸ்வரனின் பாதங்களை சிரம் ஏற்று ஆட்சி செய்த எங்கள் கரிகால் சோழன் கட்டிய கல்லணை. கல்லால் கட்டியதால் இது கல்லணையாமோ அல்லவே…இனி எத்தனை அணை கட்டினும் இதற்கு இணையாமோ” கல்லணை, காவிரிக்கு மட்டும் சிறப்பல்ல எங்கள் கீளிக்கூடு கிராமத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் ஆரசாட்சி புரிந்து வரும் ஸ்ரீசுப்ரமணியர் ஆலயம். ஷஷ்டி+அனுஷம் சேர்ந்து அனுக்கிரகம்.”முருகனும், பெரியவாளும் சேர்ந்து நடத்தி கொடுத்த பாலாலயம் மற்றும் திருப்பணிகள் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கல்லணை, கிளிக்கூடு கிராமத்தில் மிக நீண்ட காலமாக சிதிமடைந்து வழிபாடு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் இருந்த ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியஸ்வாமி ஆலயம். மேற்கு பார்த்த முருகர் ஆலயம் விஷேசம். பழநிக்கு அடுத்து இங்கு தான் முருகர் மேற்கு நோக்கி இருக்கிறார் மிகவும் சிறப்பு சிதிலமடைந்த ஒவ்வொரு ஆலயத்தை பார்க்கும் போது ஏன் இந்த ஆலயம் இப்படி மனம் வேதனையடையும்.இதற்கு காரணங்கள் பல. மக்களிடம் பக்தி இல்லாமல் போனது |பொருளாதாரம் இல்லாத நிலை | இறைநம்பிக்கையை பற்றி தவறான பிரச்சாரம். இப்படி பல பல காரணங்கல் இனி காரணம் தேடி பலன் இல்லை இனி செய்ய வேண்டியது என்ன? அதனையே ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக செய்து வருகிறோம். இது போன்ற சிதிலமடைந்த ஆலயங்களை தேடி தேடி சென்று அவ்வாலயங்களை நித்திய பூஜைக்கு ஏற்பாடு செய்து அங்குள்ள மக்களிடம் பக்தி வளர்க்க தொடர் உற்சவங்களையும், விழாக்களையும் நடத்தி வருகிறோம். இது ஸ்ரீமஹாபெரியவா நமக்கிட்ட ஆக்னை, அனுக்கிரகம் இதுவே நாம் செய்த பாக்கியம். கிளிக்கூடு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியஸ்வாமி ஆலயமும் சிதிலமடைந்த ஆலயமே… மாதங்களில் உகந்தது கார்த்திகை, நட்சத்திரங்களில் கார்த்திகை, ஆகவே 2023ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய தீப திருநாளில் நம் நித்தியமும் கைங்கர்யத்தின் சார்பாக இவ்வாலயத்தில் 26.11.2023 பானுவாஸரத்தில்/விஷேச நாளில் காலை பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்மக்களின் சங்கல்பத்துடன் விக்னேஷ்வர பூஜையும், வாஸ்தும்,பிரவேச பலி பரிகார பூஜைகளும் ஊர் காவல்தெய்வம், எல்லை தெய்வங்களிடம் பூஜை செய்து அவர்களது அனுக்கிரத்துடனும் உழவார பணியை துவங்கி ஆலயத்தின் மேல் படர்ந்து இருந்த மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு, வனம் போல் மண்டிக்கிடந்த சுற்று பிரகாரம் சுத்தம் செய்யப்பட்டது,ஆலயத்தில் தெய்வ விக்ரங்களும் சுத்தம் செய்யப்பட்டது. கார்த்திகை தீபதிருநாளில் முருகனுக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்று நீண்ட காலங்களுக்கு பின் தீபம் ஏற்றப்பட்டது..ஊர் மக்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு அகல் கொடுத்து தீபம் ஏற்ற சொல்லி ஆலயம் தீப ஒளியால் நிறைந்தது.. முருகருக்கு விஷேசமான கார்த்திகை தீபதிருநாளில் வழிபாடில்லாத முருகர் ஆலயத்தை விளக்கேற்றி பூஜை செய்தோம் என்றால் எல்லாம் நம்மை வழிநடத்தும் கருணாமூர்த்தி கண்கண்ட தெய்வம் ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவாவின் அனுக்கிரமே நாம் செய்த பாக்கியம். அன்று கிராம மக்களிடம் சொன்னோம்.விரைவில் முருகன் அனுக்கிரத்துடன் திருப்பணி செய்வோம் என்று. “இதுவரை செய்தது நம் முயற்சியே.”*”இனி பின்பு நடந்து அனைத்தும் முருகனின் அருளே.ஆம்” ஒவ்வொருவராய் கனவில் சென்று அழைத்து வந்த முருகன்… நாம் இவ்வாலயத்தில் பூஜை துவங்கிய 30 நாளில் இந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பூர்வீக கிராமத்தார் என ஒவ்வொருவரின் கனவிலும் முருகர் சென்று ஆலயத்திற்கு வரவழைத்தது மிக பெரிய அற்புதமே.. ஸ்ரீமுருகர் அனுக்கிரகத்துடன் திருப்பணிக்காக அறநிலையத்துறையில் முறைபடி அனுமதிக்கு விண்ணப்பித்து எந்த நாளில் செய்யலாம் என யோசித்தால் நமக்கு அமைந்தது மார்ச்/ பங்குனி 6 நாள் சஷ்டியும்+அனுஷமும் கூடிய குருவாரமும் கூடிய 20.03.2025 அற்புதமான நாள், அந்த நாளிலேயே அனுமதி பெற்று ஸ்வாமிகளை அத்தி பலகையில் ஆவாஹனம் செய்து பின்னர் ஸ்வாமி, விநாயகர், மயில், இடும்பன் என அனைத்து ஸ்வாமிகளையும் பாலாலயம் செய்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது.. மிகச்சிறப்பாக நடந்தது ஸ்ரீசுப்ரமணியர் பாலாலயம்…விரைவில் மின்வசதி, நீர் வசதி, செய்து திருப்பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.. இப்பெரும் கைங்கர்யத்தில் பங்கெடுக்க விரும்பும் ஸ்ரீமுருக பக்தர்களையும், ஸ்ரீமஹாபெரியவா பக்தர்களையும் அழைக்கிறோம். ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமும், ஸ்ரீசுப்ரமணியர் அனுக்கிரகமும் பரிபூரணமாக கிட்டும்.* Latest Updates ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Latest Posts

Naducavery Temple
நடுகாவிரி ஸ்ரீ பிரசன்ன விநாயகர் – ஸ்ரீசந்திரசேகரேந்திர கணபதி

Makimalai Temple
Content will be Update Soon… Latest Updates

Thiruvanaikovil
Content will be Update Soon… Latest Updates
Power of Presence
immerse yourself in the gentle embrace of full mindfulness.