Skip to content
Edit Template

Alaya Kainkaryam

ஆலய கைங்கர்யம்

புதிய ஆலயங்களை கட்ட வேண்டாம்; ஏற்கனவே உள்ள ஆலயங்களை காப்பாற்றுங்கள்” — ஸ்ரீமஹாபெரியவா வாக்கு. பாரத தேசம் முழுவதும் அரசர்களும் முன்னோர்களும் எண்ணற்ற ஆலயங்களை கட்டியுள்ளனர். அவற்றை பாதுகாத்து நித்திய பூஜை நடைபெறச் செய்வதே நமது “நித்தியமும் கைங்கர்யம்” டிரஸ்டின் முதன்மை நோக்கம்.

நித்தியமும் கைங்கர்யம் - ஆலய கைங்கர்யம்

பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து கிடப்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள்: மக்களிடம் பக்தி குறைவு நிதி ஆதாரம் இல்லாமை எனவே நம் ஆலய கைங்கர்யத்தின் முதல் நோக்கம் — அந்த மக்களிடம் பக்தியை விதைப்பதும், ஆலயத்திற்கு நிலையான நிதி ஆதாரம் ஏற்படுத்துவதும்.

  • கிராம மக்களை ஒன்று சேர்த்து ஆலய சீரமைப்பு முடிவு

  • தேவபிரசன்னம் பார்த்து பரிகார வழிமுறைகள்

  • உழவாரப்பணி செய்து ஆலய சுத்தம்

  • ஸ்வாமி, அம்பாளுக்கு பாதுகாப்பான மேற்கூரை அமைத்தல்

  • தண்ணீர் வசதி (போர்), மின்சாரம், விளக்கு வசதி

  • நித்திய பூஜைக்கு தேவையான அடிப்படை அமைப்பு

ஸ்ரீமஹாபெரியவா வாக்கே நமக்கு ஆக்னை

பாரத தேசம் முழுவதும் நம் முன்னோர்கள் எண்ணிலடங்கா ஆலயங்களை கட்டி வைத்துள்ளனர். இனி புதிதாக ஆலயங்கள் கட்ட வேண்டாம், இருந்த ஆலயங்களை பாதுகாப்பதே தர்மம் என்று ஸ்ரீமஹாபெரியவா வலியுறுத்தினார். இன்று பல ஆலயங்கள் சிதிலமடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன — மக்களிடம் பக்தி குறைவு மற்றும் நிதி ஆதாரம் இல்லாமை. இந்த இரு குறைகளையும் சரிசெய்து, ஆலயங்களில் நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே நமது “நித்தியமும் கைங்கர்யம்” திட்டத்தின் நோக்கம்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நீங்களும் இந்த ஆலய கைங்கர்யங்களில் பங்கெடுக்க நித்தியமும் கைங்கர்ய உறுப்பினராக இணைந்து கொள்வீர்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர..