Skip to content
Edit Template

Kalvi Kainkaryam

வித்யா / கல்வி - கைங்கர்யம்

அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.” — மகாகவி பாரதியார் ஆன்மிகமும் கல்வியும் ஒன்றிணையும் போது தான் சமூகம் வளரும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் தர்மமும், பண்பாடும், ஆஸ்திக புத்தியும் பதிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஆன்மிக கல்வியின் அவசியம்

மற்ற தேசங்களில் மதமும் கல்வியும் முரண்படாமல் வளர்ந்தன. ஆனால் நம் நாட்டில் உருவான கல்வி முறை, மத பாரம்பரியத்திலிருந்து விலகியது. இதனால் குழந்தைகள் தங்கள் சொந்த சாஸ்திரங்களோடு தொடர்பில்லாமல் வளர ஆரம்பித்தனர். சாஸ்திரங்களின் உண்மையான நோக்கம் அறியப்படாததால், அவை குறித்து தவறான எண்ணங்கள் உருவானது. சிறு வயதிலேயே ஆன்மிகத்தை “முதல் கல்வி”யாக கற்பித்தால், அந்த குழந்தைகளின் மனதில் தர்மமும், கலாச்சாரமும் என்றும் நிலைத்து நிற்கும். (தெய்வத்தின் குரல் – பாகம் 1, பக்கம் 292)

நமது வித்யா கைங்கர்யம்

கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் அர்ச்சகர்கள், வைதிகர்கள் மற்றும் ஆலய கைங்கர்யம் செய்யும் பக்தர்களின் குழந்தைகளுக்கு, மேலும் நித்திய பூஜை நடைபெறும் கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கல்வி உதவி வழங்கி வருகிறோம். ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பால-பெரியவா ஆக்ஞைப்படி, வேதபாடசாலைகளில் வேதமும் பள்ளிக் கல்வியும் கற்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கட்டண உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வியும், ஆன்மிக வளர்ச்சியும் ஒன்றாக மேம்படுகிறது. அவர்கள் வளர்ச்சியால் ஆலயங்களும் தர்மமும் நிலைத்திருக்கும்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன், வித்யா-கல்வி கைங்கர்யத்தில் வருடம் ஒருமுறை பக்தர்கள் பங்கேற்கலாம். ஒரு குழந்தையின் கல்விக்காக நாம் செய்யும் கைங்கர்யம் — நம் சமயம், பாரம்பரியம், சமுதாயம் ஆகியவற்றுக்குச் செய்யும் கைங்கர்யமே. கல்வி கைங்கர்ய நன்கொடைக்கு 80G வரிச்சலுகை வழங்கப்படும்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர..