
Naducavery Temple
நடுகாவிரி ஸ்ரீ பிரசன்ன விநாயகர் - ஸ்ரீசந்திரசேகரேந்திர கணபதி ஆலய திருப்பணி கைங்கர்யம் மற்றும் கும்பாபிஷேகம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் காவிரிகரையில் நம் ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா நடுகாவிரி யாத்திரையின் போது அவரது உத்தரவு படி காவிரி ஆற்றுகரையில் தோண்டி அதில் கிடைத்த விநாகயருக்கு அமைக்கபட்ட ஆலயம் தான் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம்..
நடுகாவிரி கிராமத்து அக்ரஹாரத்தை சேர்ந்த நாகேஷ் மற்றும் சதிஸ் அவர்களின் முழு முதல் முயற்சியுடனும் கிராமம் / அக்ரஹார மக்கள் முழு ஒத்துழைப்புடனும் நம் ஸ்ரீமஹாபெரியவர் கைங்கர்யம் டிர்ஸ்ட் மற்றும் கிராம மக்கள் சார்பாக திருப்பணிகள் செய்ய ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி அவர்களிடம் அனுக்கிர ஆசிர்வாதம் பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் 06.03.18 அன்று காலை ஸ்ரீபிரசன்ன விநாயகர் ஆலயம் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கி ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிர ஆசிர்வாத்துடத்துடன்
பிரசன்னவிநாயகர் – ஸ்ரீசந்திரசேகரேந்திர கணபதி ஆலய திருப்பணிகள் சிறப்பாக முடிவுற்று நம் பாலபெரியவா ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உத்தரவு படி..
‘’விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 23ம் மார்ச்-09.12.2018 மூலம் நட்சத்திரத்தில் காலை 7.00 மணிக்கு மேல் 8.30க்குள் தனுர் லக்னத்தில் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்’’ வெகு சிறப்பாக நடைபெற்றது…
சிறப்பு தகவல் -ஸ்ரீசந்திரசேகரேந்திர கணபதி
ஸ்ரீமஹாபெரியவா சொல்லி மண்ணில் இருந்து எடுத்த விநாயகர் பின்னர் காலத்தில் பின்னமாகி இருந்ததால் அதை எடுத்து வெளியில் வைத்து விட்டு கர்பகிரஹத்தில் புதிய விநாயகர் விக்ரஹம் பிரதிஷ்ட்டை செய்துள்ளார்கள்…தற்போது நாம் ஸ்ரீபால பெரியவாவிடம் இந்த விபரத்தை சொல்லி உத்தரவு கேட்ட போது பெரியவா சற்று நிமிடம் கண் முடி தியானத்தில் இருந்து பின்னர் அதை ஸ்தபதி கொண்டு சரி செய்து வைத்து விடுங்கள் என்றார், ஸ்ரீமஹாபெரியவா பக்தர்களான நமக்கு ஒரு பாக்கியம் மஹாபெரியவா சொல்லி எடுத்த விநாயகரை என்ன பின்னமாகி இருந்ததோ அதை பாலபெரியவா உத்தரவு படி சரி செய்து வெளியில் தனி மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்து மீண்டும் அவரை வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தோம்..
அவருக்கு என தனி நாமகரணம் சூட்ட வேண்டுமே என ஆகையால் மஹாபெரியவா உத்தரவால் மண்ணில் இருந்து வந்ததால் அவருக்கு ‘’ஸ்ரீசந்திரசேகரேந்திர கணபதி’’ என்ற நாமமே சூட்டபட்டு இன்று அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது…
வழி : திருச்சி to கல்லணை to திருக்காட்டுப்பள்ளி to நடுகாவிரி
அல்லது தஞ்சாவூர் to திருவையாறு to நடுகாவிரி
