Nithyamum Kainkaryam
எங்கள் தொடக்கம்
ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாளின் பரிபூரண அனுக்கிரகத்துடன் ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி 29 | 13.01.2018 | அனுஷம் இந்த நித்திய கைங்கர்யம் துவங்கப்பட்டது. காலம், தேசம் மாறினாலும் பக்தர்களை ஒன்றிணைக்கும் ஒரே அடிநாதம் – குருபாதமே. அந்த குருபாதமே ஜகத்குரு ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா.
நித்தியமும் கைங்கர்யம் நித்தியமும் ஒரு ரூபாய்
ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நாம் நித்தமும் 1 ரூபாய் வழங்கினால் போதும் 1 x 30 = மாதம் 30 ரூபாய் என்று வங்கி கணக்கில் செலுத்தினால் போறும், 30 ரூபாய் ஒரு நபருக்கு என்று வழங்கலாம் அல்லது ஒர் குடும்பத்திற்கு என்று வழங்கலாம்.
தங்களின் விருப்பம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம்.*
ஸ்ரீமஹாபெரியவா எங்களுக்கு நிறைய அனுக்கிரகம் செய்துள்ளார்...எனவே மாதம் 30 ரூபாய் என்ன அதற்கு மேலும் எங்களால் அனுப்ப இயலும் என்றாலும் அனுப்பலாம் அது தங்களின் விருப்பமாக ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே.
கைங்கர்யப் பாதை
நித்திய கைங்கரியம்
தங்களுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதும், தங்களிடம் இருந்து என்ன பெறலாம் என்பதும் அவதூறு அல்ல — அது அனுகிரகமே. நித்திய கைங்கரியம் என்பது ஒவ்வொருவரும் தங்கள் திறன் மற்றும் மனநிலைக்கேற்ப தொடர்ந்து பங்கேற்கும் ஒரு எளிய, புனிதமான சேவையாகும்.
நித்தியமும் ஒரு ரூபாய், மாதம் 30 ரூபாய் என்ற இந்த முயற்சி, அனைவரும் ஸ்ரீமஹாபெரியவா கைங்கரியத்தில் இணைந்து சேவை செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஒரே தவணை அல்ல; மாதம் மாதம் தொடர்ச்சியாக செய்யப்படும் இந்த கைங்கரியமே நம் நம்பிக்கையும் வழியும்.
நித்திய கைங்கரியம்
நித்திய கைங்கரியம் என்பது தினமும் இறைவனை நினைத்து, மனம்–மொழி–மெய் ஒன்றுபட்டு செய்யப்படும் சேவை. காலை, மாலை ஜெபம், நாமஜபம், விளக்கு ஏற்றுதல் போன்றவை இதன் அடிப்படை. இதனால் உள்ளம் சுத்தமாகி, வாழ்க்கையில் அமைதியும் ஒழுங்கும் ஏற்படுகிறது.
அன்னதான கைங்கரியம்
பசித்தவர்களுக்கு உணவளிப்பது மிக உயர்ந்த கைங்கரியமாக கருதப்படுகிறது. “அன்னமே பிரம்மம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படும் இந்த சேவை, இறைவனுக்குச் செய்யும் நேரடி அர்ப்பணிப்பாகும். இதனால் புண்ணியமும் மனநிறைவும் கிடைக்கிறது.
சேவை வழி பக்தி
கைங்கரியம் என்பது வெறும் செயல் அல்ல; அது பக்தியின் வெளிப்பாடு. ஆலயம், சமூகம், மனிதர்கள் ஆகியோருக்கு செய்யப்படும் சேவை இறைவனையே சேவிப்பதற்குச் சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த சேவை நம்மை ஆன்மிகமாக உயர்த்துகிறது.
நித்தியமும் கைங்கரியமும் – வாழ்க்கை வழி
நித்திய பக்தியும் கைங்கரிய சேவையும் இணைந்தால் வாழ்க்கை ஒரு தெய்வீக பயணமாக மாறுகிறது. தினசரி வழிபாடு, சேவை, தானம் ஆகியவை மன அமைதி, நல்ல கர்மா, ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றை தருகின்றன.
இக் கைங்கர்யத்தின் மூலம்
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்கள், வருமானமே இல்லாத அர்ச்சகர்கள், வேதபாடசாலை குழந்தைகளின் உணவு, கோசாலை பசுக்கள் எல்லாவற்றிற்கும் மாதம் மாதம் ஒரு தொகை வழங்கப்படுகிறது.
இக் கைங்கரியத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்கள், வருமானமே இல்லாத அர்ச்சகர்கள், வேதபாடசாலை குழந்தைகளின் உணவு, கோசாலை பசுக்கள் எல்லாவற்றிற்கும் மாதம் மாதம் ஒரு தொகை வழங்கப்படுகிறது.
• தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில், நித்திய வழிபாடு இல்லாமல் இருக்கும் ஆலயத்தில் உங்களது கைங்கரியத்தால் இருள் அகன்று, தீப ஒளி பிரகாசிக்கும். அந்த இறைவன், உங்களின் வாழ்விலும் ஒளி பிரகாசிக்க செய்வார்.
• இன்று தன் வாழ்வாதாரத்திற்கே போதிய வருமானம் இல்லாத நிலையிலும், “என் இறைவனுக்கு குறை வரக்கூடாது” என்று ஆத்மார்த்தமாக நித்திய பூஜை செய்யும் கிராமப்புற ஆலய அர்ச்சகர்களின் ஜீவனத்திற்கு உங்களின் ஒரு ரூபாய் பங்காகிறது
• இந்த உலகம் சுபிட்சமாக இருக்க, வேதமே க்ஷேமம் என்று தன் வாழ்வையே அர்ப்பணித்து வேதம் கற்கும் வேதபாடசாலை குழந்தைகளுக்கு உங்களின் ஒரு ரூபாய் மூலம் நித்தமும் உணவாகிறது.
• அன்னைக்கு நிகராக தாய் பாலுக்கு சமமாக நமக்கு நித்தமும் தன் உதிரத்தை பாலாக தருவது பசுவே..ஆகவே பசுவை நாம் தாய் போல் காக்க வேண்டும்...கோ கைங்கர்யம் பற்றி பெரியவா நிறைய சொல்லி உள்ளார் அதன்படி பசுக்களை வைத்து செயல்படும் கோசாலை பசுக்களுக்கு தங்களின் ஒரு ரூபாய் மூலம் நித்தமும் உணவளிக்க முடியும்.கோசாலை பசுக்களுக்கு தங்களின் ஒரு ரூபாய் மூலம் நித்தமும் உணவளிக்க முடியும்.
கைங்கர்யப் பாதை
ஒரு ரூபாய் – நித்திய கைங்கரியம்
நம் அன்றாட தேவைகளுக்காக பல செயல்களை நாம் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மை என்றும் ரட்சித்து காத்து, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளித்து, நம்மை சரியான வழியில் நடத்தி வரும் நம் ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்கு, நாம் நித்தமும் ஒரே ஒரு ரூபாய் வழங்கலாமே… ஸ்ரீமஹாபெரியவா அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் நடைபெறும் நம் நித்திய கைங்கர்யம் மூலம், தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆலய கைங்கர்யங்களில் நாம் அனைவரும் பங்களிக்க முடியும்.
இதில் முடிந்தவர் – முடியாதவர் என்ற மனக்குறையே இல்லை. அனைவரின் ஒரு ரூபாய் பங்களிப்பின் மூலம், மாதம் மாதம் அனைத்து கைங்கர்யங்களும் சீராக நடைபெறுகின்றன. இது நிச்சயமாக ஸ்ரீமஹாபெரியவா நமக்கு அளித்த பரிபூரண அனுகிரகமே. நித்திய கைங்கர்யத்தில் இணைய விரும்பும், ஸ்ரீமஹாபெரியவா அனுகிரகம் பெற்ற அனைத்து பக்தர்களும் இந்த புனித முயற்சியில் இணைந்து கொள்ளலாம்.
நித்தியமும் கைங்கர்ய உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ரசீதும்,பிரசாதம், ஸ்ரீமஹாபெரியவா காலண்டர் அனுப்பி வைக்கப்படும். ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா என்ற நமது வாட்சாப் குழுவில் இணைந்து நமது ஒவ்வொரு கைங்கர்யங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நித்தியமும் கைங்கர்யம்
நித்தியமும் ஒரு ரூபாய்
ஸ்ரீமஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நாம் நித்தமும் 1 ரூபாய் வழங்கினால் போதும். 1 x 30 = மாதம் 30 ரூபாய் என்று வங்கி கணக்கில் செலுத்தினால் போறும். 30 ரூபாய் ஒரு நபருக்கு என்று வழங்கலாம் அல்லது ஒர் குடும்பத்திற்கு என்று வழங்கலாம். தங்களின் விருப்பம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம்.* ஸ்ரீமஹாபெரியவா எங்களுக்கு நிறைய அனுக்கிரகம் செய்துள்ளார். எனவே மாதம் 30 ரூபாய் என்ன, அதற்கு மேலும் எங்களால் அனுப்ப இயலும் என்றாலும் அனுப்பலாம். அது தங்களின் விருப்பமாக ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே.