பெரியவா அனுபவம்
வார்த்தைகளால் சொல்ல முடியாத தெய்வீக உணர்வு
மஹாபெரியவா ஸித்தி அடைந்த நாளில்(08-01-1994) ஒரு அமெரிக்கருக்கு கொடுத்த தரிசனம்.
அந்த அமெரிக்க வேதாந்த பேராசிரியர் ராபின்சன் சொல்கிறார்.
“அன்றைய தினம் எனக்கு மகாபெரியவா தரிசனம் கொடுத்து, Good-bye என்று மூன்று தடவை சொல்லி கையை அசைத்துவிட்டு மறைந்தார்….இந்தச் செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.அதனால் இது குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை” என்று…நாத்தழுதழுகக் கூறினார்.
அமெரிக்காவிலுள்ள -தென் கரோலினா பல்கலைக் கழகத்தின் கவர்னர், பேராசிரியர் ராபின்சன். அவர் கிரேக்க வேதாந்தத்துறையில் தேர்ச்சி பெற்றவர் அவரும் அமெரிக்கா பல்கலைக்கழங்களிலிருந்து, பல துறைகளைச் சேர்ந்த ஆசிரியர் குழு சென்னை வந்தது. அதில் ஒரு குழு காஞ்சிபுரம் சென்று வந்தது….
ஒருநாள் அமெரிக்காவில் இந்திய நண்பர் நாகேஷ்வரன் ராபின்சனிடம் “நீங்கள் காஞ்சிபுரம் சென்ற போது மஹாபெரியவரை தரிசித்திர்களா என்றார்….
அவ்வளவு தான்! ராபின்சன் கண்கள் மலர்ந்தன. அவர் காஞ்சி சென்று வந்த விந்தையான கதையைச் சொன்னார்..
நாங்கள் காஞ்சியில் சிறு சிறு குழுவாகப் பிரிந்து சென்றோம்… காஞ்சியில் உள்ள சங்கரமடம் பற்றியோ, மஹாபெரியவர்களைப் பற்றியோ எங்களுக்கு ஒன்றும் தெரியாது. என்னுடன் இன்னும் இருவர் சேர்ந்து சென்றோம். எதேச்சையாக சங்கரமடத்தின் வாசலுக்கு சென்றோம்….எதோ கோவில் என்று நினைத்து உள்ளே நுழைந்தோம்..
அங்கே நடந்தது தான் பெரிய விந்தை:
“ஓரு கயிற்றுக் கட்டில் போல இருந்தது. அதில் காவி உடை தரித்த வயது முதிர்ந்த ஒருவர் அமர்ந்திருந்தார் ஒரே கூட்டம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
திடீரென ஒரு பையன் எங்களிடம் ஓடி வந்தான்.”நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டான். வியப்போடு, ‘ஆமாம்’ என்றோம்.
எங்களை யாருக்கும் அங்கே தெரிய வாய்ப்பே இல்லை. அவனது அடுத்த கேள்வி எங்களை திக்குமுக்காடச் செய்தது. ‘உங்களில் யார் பேராசிரியர் ராபின்சன்? அவரை மட்டும் அழைத்து வர பெரியவா உத்தரவு” என்றான்.
எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அன்னிய தேசத்தில் இருந்து வந்திருக்கும் என்னை இங்கு யாருக்கு எப்படி தெரியும்..?
வியப்பின் உச்சத்தில் இருந்து வெளிவராமல் அந்த சிறுவனிடம் நான் தான் ராபின்சன் என சொல்லி அவன் பின்னே சென்றேன்..
“பெரியவரைப் பார்த்தேன். அருகில் அமரச் சொன்னார். அவ்வளவுதான்! அதற்குப்பின் காலம்(நேரம்) கடந்தது தெரியவில்லை.!” எதுவும் பேசமுடியாமல் ஆனந்தக் கண்ணீர் மட்டுமே வந்தது…அந்த அற்புதமான அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது…
“I understood that those who have seen it don’t talk about it, and those who talk about it haven’t seen it.”
சொன்னவர் கண்டதில்லை, கண்டவர் சொன்னதில்லை, என்பதைப் புரிந்து கொண்டேன்….
அமெரிக்க பல்கலைகழக வேந்தாந்த பேராசிரியர் மஹாபெரியவா பற்றி சொன்ன அற்புதமான அனுபவம்…
இதே ராபின்சன், 1994 ஏப்ரல் – மே மாத வாக்கில், அலுவல் நிமித்தமாக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் வந்துள்ளார்… அப்போது டாக்டர் பத்மா சுப்ரமண்யத்தை தொலைபேசியில் அழைத்து, “மஹா பெரியவா சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.
ஸ்ரீசுவாமிகள் ஜனவரி மாதம் சித்தி அடைந்து விட்டதாக அவர் கூற ராபின்சன் தன் புருவத்தை உயர்த்தி Is it on 8th or 9th என்று கேட்க
“அதெப்படி, அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?” என்று டாக்டர் பத்மா சுப்ரமணியம் வினவியிருக்கிறார்.
அதற்கு ராபின்சன் சொன்னது மேலும் ஆச்சர்யம்..
ஜனவரி 8th “அன்றைய தினம் பிற்பகல் நேரம் இருக்கும் மதிய உணவு முடித்து சற்று ஒய்வாக அமர்ந்து இருந்த நேரம் என நினைக்கிறேன்… எனக்கு மஹாபெரியவர் தரிசனம் கொடுத்து, Good-bye என்று மூன்று தடவை சொல்லி, கையை அசைத்து விட்டு மறைந்தார்….
இந்தியாவில் இருக்கும் ஒரு குரு இங்கு எனக்கு காட்சி கொடுத்தார், அவர் GOOD -BYE என்று என்னிடம் சொன்னார் என்று இந்தச் செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது…அதனால் இது குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை’ என்று, நாத்தழுதழுக்கக் கூறினார்…
ஸ்ரீமஹாபெரியவா ஜகத்குரு ஆயிற்றே..
நாம் ஆத்மார்த்தமாக எற்று கொண்டு குரு நம்மை என்றும் எப்போதும் நம்முடன் இருந்து வழிநடத்துவார் என்பதற்கு இதை விட சான்று வேறு என்ன வேண்டும்…
என்றும் ஸ்ரீமஹாபெரியவா ஆக்னை படி நித்தியமும் கைங்கர்யம்..
Add Your Heading Text Here
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.